×

நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைந்தாரா? : தாயார் மேனகா விளக்கம்

சென்னை : மலையாள நடிகை மேனகா, தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘நெற்றிக்கண்’  படத்தில் நடித்தார். மேலும் பல படங்களில் நடித்துள்ள மேனகாவின் கணவர் சுரேஷ் குமார், மலையாளத்தில் பல படங்கள் தயாரித்துள்ளார். சில படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவர் கேரளா பாஜவில் இருக்கிறார். சமீபத்தில் டெல்லி பாஜ தலைமை அலுவலகத்தில் பிரதமர்  மோடியை சந்தித்தார் மேனகா. இதையடுத்து அவரும், அவரது மகள் நடிகை கீர்த்தி சுரேசும் பாஜவில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மேனகா அளித்த விளக்கம் வருமாறு:

என் கணவர் சுரேஷ் குமார் பாஜவில் இருக்கிறார். அதனால் மக்களவை தேர்தலில் அந்த கட்சிக்கு பிரசாரம் செய்ய டெல்லி சென்றேன். பிரசாரம் முடிந்ததும் மலையாள படவுலகை சேர்ந்த சுரேஷ்கோபி, கவிதா உள்பட சினிமா பிரபலங்கள், பாஜ தலைமை அலுவலகத்தில் பிரதமரை சந்தித்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம். இதையடுத்து நான் பாஜவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்ல, என் மகள் கீர்த்தி சுரேசும் பாஜவில் சேர்ந்துள்ளதாக பேசுகின்றனர். நாங்கள் எந்த கட்சியிலும் உறுப்பினர் கிடையாது. எங்களுக்கு அரசியலில் சேரும் எண்ணம் இல்லை.

Tags : Kirti Suresh ,BJP , Actress Kirti Suresh ,joined the BJP, Mother Manaka Illustration
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...